பதிவு செய்த நாள்
19
நவ
2018
01:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை (நவம்., 20ல்) பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவில், வலம் வரும் மகா ரதத்துக்கு கலசம் பொருத்தப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை (நவம்., 20ல்) பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர், தனித்தனி தேரில் வீதி உலா வருவர்.
இதில், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வீதி உலா வரும், 100 டன் எடை கொண்ட, 118 அடி உயரமுள்ள மகா ரதத்தினை, மூன்று டன் எடை கொண்ட ராட்சத இரும்பு
சங்கிலியால் ஆன, வடத்தை பக்தர்கள் இழுத்து சென்று, மாட வீதி உலா வந்து, நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்த மகா ரதத்தின் உச்சியில் கலசம் பொருத்தப்பட்டு, தோரணம் மற்றும் குதிரை பொம்மைகள் ஆகியவை கட்டி அலங்கரிக்கப்பட்டன.