அலங்காநல்லுார்: அழகர்கோவிலில் திருக்கார்த்திகை தீபவிழாவையொட்டி நேற்று மாலை அழகர்மலை உச்சியில் உள்ள வெள்ளிமலை கோம்பை தளத்தில் திருக்கார்த்திகை தீபகுண்டம் ஏற்றப்பட்டது. முன்னதாக மலையடிவாரத்தில் உள்ள கோயில் முழுவதும் தீபவிளக்குகள் ஏற்றப்பட்டன. மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு விசேஷ பூஜை, தீபாராதனை நடந்தது. பின்னர் உற்ஸவ பெருமாள் மேளதாளம் முழங்க புறப்பாடாகி உறியடி மண்டபம் முன்பாக எழுந்தருளினார். அங்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்திருந்தனர்.