திருமலை மலைகொழுந்தீஸ்வரர் கோயில் மலையில் மகா தீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2018 12:11
சிவகங்கை: பழமையான திருமலை மலைகொழுந்தீஸ்வரர் கோயில் மலையில் நேற்று மகா தீபம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருக்கார்த்திகையையொட்டி நேற்று மாலை 5:00 மணிக்கு 3 கி.மீ., கிரிவலப் பாதையில் பக்தர்கள் சுற்றி வந்தனர். தொடர்ந்து மலைகொழுந்தீஸ்வரர் கோயிலில் அபிேஷகம், ஆராதனை நடந்தது. அங்கிருந்து தீப்பந்தத்துடன் சென்ற கிராம மக்கள், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றினர். தீபத்தில் 100 கிலோ நெய் ஊற்றப்பட்டிருந்தது. இந்த தீபம் 3 நாட்களுக்கு எரியும். சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.