பதிவு செய்த நாள்
24
நவ
2018
12:11
தேனி:மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் நேற்று (நவம்., 23ல்)திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி சிறப்பு பூைஜ, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தேனி -பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், என்.ஆர்.டி.,நகர் கணேச கந்த பெருமாள் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது.
* கருவேல்நாயக்கன்பட்டி மலையில் உள்ள சிவன்- பார்வதி கோயிலில் 50 கிலோ எடையுள்ள நெய்யால் மகாதீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை
கோயில் நிர்வாக குழு செயலாளர் ஜெயபாண்டியன், பொருளாளர் சகாதேவன், நிர்வாகிகள் செய்தனர்
* போடி: தென் திருவண்ணாமலை என போற்றப்படும் போடி பரமசிவன் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா, சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை குழு குருநாதர் சுருளிவேல் தலைமையில்
நடந்தது. தலைவர் ஜெயராமன், செயலாளர் குமார், துணைத் தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர்.
நகரில் இருந்து பார்த்தால் ஜோதி தெரியும் படி 171 கிலோ எடையுள்ள திரி மூலம் 702 லிட்டர் நெய் ஊற்றி அரோகரா கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. சிவனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதனை அர்ச்சகர் சுந்தரம் செய்தாரர். முருகன், லெட்சுமி நாராயணனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமானோர் தரிசித்தனர்.
* பெரியகுளம்: கைலாசநாதர் மலைக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழாகொடியேற்றத்துடன் துவங்கியது. தென்மாவட்டத்தின் திருவண்ணாமலை என இக்கோயில் அழைக்கப்படுகிறது. மூலவர் பெரியநாயகி உடனுறை, கைலாசநாதர் ராஜஅலங்காரத்தில் காட்சியளித்தனர். ராஜா பட்டர் தலைமையில் பூஜை நடந்தது.
அன்பர் பணிக்குழு தலைவர் ஜெயபிரதீப், 500 கிலோ நெய் ஊற்றிய கொப்பறையில் மகா தீபம் ஏற்றினார். தேனி பாஸ்கரன் எஸ்.பி., நகராட்சி முன்னாள் தலைவர் ஓ.ராஜா, அன்பர்
பணிக்குழு செயலாளர் சிவக்குமார், செயல்அலுவலர் பாலகிருஷ்ணன், பாலசுந்தரம், ராஜகோபால், ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை அன்பர்பணிக்குழு
உறுப்பினர்கள் செய்தனர். குருதட்சிணாமூர்த்தி சேவா சங்கம் ஆலோசகர் சரவணன், சித்ரா குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினார்.
* பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
*நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்தயாஸ், பக்தர்கள் பங்கேற்றனர்.
* ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயிலில் முருக பக்தர்கள் சார்பில் அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
டி.சுப்புலாபுரம் கந்தநாதர் கோயில், சக்கம்பட்டி மேல விநாயகர், கல்கோயில், நன்மை தருவார் ஐயப்பசுவாமி, ஆண்டிபட்டி பாலவிநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
சக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோயில், ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பாப்பம்மாள்புரம் பகவதியம்மன் கோயில்களின் வளாகங்களை விளக்குகளால் அலங்காரம் செய்து வழிபட்டனர்.
* நெய் குடம்: தேவதானப்பட்டியில் இருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் பரமசிவன் கோயில் உள்ளது. திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டுடி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, ஜெயமங்கலம், புல்லக்காபட்டி, அட்டணம்பட்டி, பெரியகுளம் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலையில் நடந்து கோயிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டனர்.சில்வார்பட்டி முனையடுவார் நாயனார் கோயிலில் இருந்து சிவனடியார் வீரமணி , மகா தீபம் ஏற்ற நெய் குடம் எடுத்துச் சென்று கோயிலில் செலுத்தினார்.
பூசாரி பொம்மு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.பரம்பரை அறங்காவலர் அருணாசேகர்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
* மூணாறு: மூணாறு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நடந்தது. அதையொட்டி பழைய மூணாறில் உள்ள பார்வதியம்மன் கோயிலில் இருந்து காவடியுடன், பால்குடம் எடுத்து வரப்பட்டு, முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை வழிபட்டனர்.
மூணாறு ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் சார்பில் பக்தி பஜனை பாடல்கள் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள நடந்தன.மாலை 6:00 மணிக்கு,கோயிலின் அருகில் உள்ள
மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இரவில் முருகன்,வள்ளி-தெய்வானை சப்பரத்தில்வீதி உலா வந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.