செஞ்சி: செஞ்சி அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மகா தீபத் திருவிழா நடந்தது. செஞ்சி பீரங்கிமேடு அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த 14ம் தேதி, கார்த்திகை தீப விழா துவங்கியது.
தினந்தோறும் சிறப்பு ஹோமம் நடந்தது. நேற்று (நவம்., 23ல்) அதிகாலை 4:00 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 5:00 மணிக்கு, அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு தீபாரதனையும், மாலை 6:00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில், ஆயிரக் கணக்கான அகல் விளக்குகள் ஏற்றி, பக்தர்கள் வழிபட்டனர்.