பதிவு செய்த நாள்
24
நவ
2018
12:11
ஆர்.கே.பேட்டை: கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி, நெல்லிக்குன்றம் சுப்ரமணிய சுவாமி மலைக்கோவிலில், நேற்று (நவம்., 23ல்) மாலை உள்புறப்பாடு நடந்தது.
ஆர்.கே.பேட்டை அடுத்த, அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம் மலை மீது அமைந்துள்ளது வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவில்.நேற்று (நவம்., 23ல்), கார்த்திகை மாத கிருத்திகையை ஒட்டி, காலை, 10:00 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு, கோவில் கோபுரத்தில், கார்த்திகைத் தீபம் ஏற்றப் பட்டது. அதைத் தொடர்ந்து, உற்சவர் உள்புறப்பாடு எழுந்தருளினார். திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.அதே போல், ஆந்திர மாநிலம், நகரி மற்றும் அதன் சுற்று வட்டார கோவில்களில், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.