பதிவு செய்த நாள்
24
நவ
2018
12:11
உடுமலை:திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது; வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி
மற்றும் கார்த்திகை வரும் நாள், திருக்கார்த்திகையாக கொண்டாடப்படுகிறது.
ஜோதி வடிவான இறைவனை வழிபடும் வகையிலும், அன்று சிவபெருமானே ஜோதியாக காட்சியளிப்பதாக ஐதீகம். திருக்கார்த்திகை தினமான நேற்று (நவம்., 23ல்), கோவில் வளாகம், மதில்கள் என அனைத்து பகுதிகளிலும் திருவிளக்கு ஏற்பட்டு, தீப கம்பங்களிலும் பிரமாண்டமான விளக்குகள் ஏற்றப்பட்டன.
பனை ஓலைகளை அடுக்கி, கோவில்கள் முன், சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அதே போல், வீடுகள், அலுவலகங்களில், வெளிப்பகுதியில், திருவிளக்குளை வைத்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பொதுமக்கள் வழிபட்டனர்.
இதனால், நகரின் பெரும்பாலான பகுதிகள் தீபங்களால் அழகாக காட்சியளித்தது. உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், விநாயகர் கோவில் மற்றும் பொது இடங்களில் சொக் கப்பனை கொளுத்தி, பொதுமக்கள் சுவாமியை வழிபட்டனர்.பாப்பான்குளம் ஞானதண்டாயு தபாணி சுவாமி கோவில், தில்லைநகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில், குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவில், பெதப்பம்பட்டி கண்டியம்மன் கோவில், முத்தையாபிள்ளை லே அவுட் சக்தி விநாயகர் கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு
கோவில்களில் திருக்கார்த்திகை விழா நடந்தது.