கடலூர்: கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை பவுணர்மியொட்டி சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.கார்த்திகை மாத பவுர்ணமியொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் (நவம்., 22ல்) மாலை பாடலீஸ்வரர், பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும்,
பஞ்சமூர்த்திகளுக்கு தீபம் வைத்து பூஜையும் நடந்தது.தொடர்ந்து, தீபங்களை ஏற்றி கோவிலை வந்து, உற்சவர் சந்திரசேகருடன் கோவில் வாசலில் வைக்கப்பட்டிருந்த 5 சொக்கப்பனைகளை பஞ்சமூர்த்திகளாக வழிபட்டு தீபம் ஏற்றப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேப் போன்று, சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு கோவில்களிலும் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.