தேவாரம்: தொழில்நுட்ப வளர்ச்சியில்லாத பழங்காலத்தில் கட்டுமானத்திற்கு மிகத்துல்லிய மான அளவீடுகளை நம்முன்னோர் பயன்படுத்தியுள்ளனர். கோயில்களில் கலைத்திறன் மிளிரும் மிக நுணுக்கமான வேலைப்பாடுடன் கூடிய தூண்கள், சுவர்கள் இதற்கு சான்றாக உள்ளன. சமனில்லாத கற்களை அடுக்கி, பல நூறாண்டுகள் தாங்கி நிற்கும் கோயில்கள் கட்டும் கலை தமிழர் மரபு வழியாக பின்பற்றப்பட்டுள்ளன.
அழிவின் விளிம்பிற்கு சென்று விட்ட இந்த கலை, கும்ப கோணத்தை சேர்ந்த சிற்பி அந்தோணிராஜ் போன்ற ஒரு சிலரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இவர் பிறப்பால் கிறிஸ்துவர் என்றாலும் சேதமடைந்துள்ள இந்து கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
தேவாரம் அவனாசி ஈஸ்வரர் கோயில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள அந்தோணிராஜ் கூறியதாவது:இக் கோயில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. முன்றடி அடித்தளத்தில் பல நூறு டன் எடையுள்ள கற்களை அடுக்கி பிரமாண்டமாக கட்டியுள்ளனர். கட்டட பாரம் பூமியை அழுத்தாமல் காற்றில் மிதப்பது போன்ற கட்டுமானத்தால், இயற்கை பேரிடர்களால் இம்மாதிரியான கோயில்களுக்கு ஆபத்தில்லை.
கும்பகோணத்தை சுற்றிலும் இது போன்ற கோயில்கள் ஏராளமாக உள்ளன.அவற்றை பார்த்து இதுபோன்ற கட்டுமானங்களில் நாமும் ஈடுபட வேண்டும் என்பது சிறுவயது முதலே ஆசை, தொல்லியல் துறையினர் கொடுத்த பயிற்சியும், கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்தப் பட்டுள்ள பண்டைய துள்ளிய அளவீடுகளும் பழமை மாறாமல் கட்டுவதற்கு கை கொடுக் கிறது. சேதமடைந்த ஏராளமான கோயில்களை சீரமைத்தது திருப்தியளிக்கிறது என்றார். இவரை வாழ்த்த 89733 33282