பதிவு செய்த நாள்
24
நவ
2018
03:11
நாமக்கல்: கார்த்திகை தீபத் திருநாள், நாமக்கல் கோவில்களில் வெகு விமரிசையாக கொண்டாப்பட்டது.
நாமக்கல் - மோகனூர் சாலை, காந்தி நகர், பாலதண்டாயுதபாணி கோவிலில், கார்த்திகை தீப உற்சவம், 1,008 தீபம் ஏற்றும் விழா, நேற்று 23ல் நடந்தது. காலை, 8:00 மணிக்கு மகா சங்கல்பம், கணபதி பூஜை, சுப்ரமணியர் ஹோமம் நடந்தது. 11:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷே கம் நடந்து, தீபாராதனையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு சுவாமி க்கு சந்தனக்காப்பு அலங்காரம், இரவு 7:00 மணிக்கு, பக்தர்களால் 1,008 தீபம் ஏற்றப்பட்டு, சுவாமி யானை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில், பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்தில், சுவாமி அருள்பாலித்தார்.
* நாமக்கல், ராஜகணபதி கோவிலில், இரவு, 7:00 மணிக்கு சொக்கப்பனை எரிக்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதேபோல, மாவட்டம் முழுவதும், கோவில்களில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட்டது.