பதிவு செய்த நாள்
25
நவ
2018
02:11
தர்மபுரி: கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த, விருபாட்சிபுரம் ராகவேந்திர சுவாமி கோவிலில், லட்ச தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமியில், கார்த்திகை தீபம் ஏற்றி கொண்டாடுவது வழக்கம். கடந்த, 22ல், கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டது. தர்மபுரி அடுத்த, விருபாட்சி புரம் ராகவேந்திர சுவாமி கோவிலில், நேற்று காலை, 7:00 மணிக்கு, கிருஷ்ணர், ஆஞ்சநேயர், ராகவேந்திரருக்கு, சிறப்பு அபி?ஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, கோவில் பிருந்தாவனம் முழுவதும் லட்சம் தீபம் ஏற்றி வழிபட்டனர்.