செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூரில் கிருஷ்ணர் கோவில் கட்ட வாஸ்து பூஜை நடந்தது.செஞ்சி, சிறுகடம்பூரில் ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு புதிதாக 15 லட்சம் ரூபாய்மதிப்பில் கோவில் கட்ட உள்ளனர். இதற்கான வாஸ்து பூஜை நேற்றுநடந்தது.இதை முன்னிட்டு ராதா ருக்மணி சமேத கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்தனர். காலை 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையுடன் வாஸ்து பூஜை நடந்தது.இதில் முக்கிய பிரமுகர்கள், திருப்பணிகுழுவினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.