பதிவு செய்த நாள்
25
நவ
2018
02:11
நாமக்கல்: ஐயப்பன் கோவிலில், ஆண்டு விழாவை முன்னிட்டு, ஜன., 14ல், மகரஜோதி தரிசனம் நடக்கிறது. நாமக்கல் - மோகனூர் சாலையில், ஐயப்பன் கோவிலில், 53ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள், கடந்த, 17 ல் துவங்கின. கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சபரிமலை மாளிகைப்புரத்து மஞ்சமாதா கோவில் மேல்சாந்தி அனிஷ்நம்பூதிரி, சுவாமிக்கு பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். விழாவை முன்னிட்டு, டிச., 2ல், கூலிப்பட்டி பழனியாண்டவர் சுவாமிக்கு பாலாபிஷேகம், மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. டிச., 5ல், ஐயப்பன் கோவிலில் லட்சார்ச்சனை நடக்கிறது. டிச., 6 இரவு, 7:30 மணிக்கு, சுந்தர வினோத் குழுவினரின் இசை சங்கமம்; 7 காலை, 9:00 மணிக்கு, லட்சார்ச்சனை நிறைவு, காலை, 10:00 மணிக்கு, நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோவிலுக்கு, பால்குட ஊர்வலம். இரவு, 7:30 மணிக்கு, கோவை அரவிந்த் சுப்ரமணியத்தின் ஐயப்பன் தத்துவம் என்ற தலைப்பில், பக்தி சொற்பொழிவு. மறுநாள் காலை, 7:30 மணிக்கு, 108 வலம்புரி சங்காபிஷேகம், அபிஷேகம், தீபாராதனை. டிச., 27 காலை, 7:00 மணிக்கு, மண்டல பூஜையை முன்னிட்டு, சுவாமிக்கு நெய் அபிஷேகம், பகல், 1:30 மணிக்கு, அபிஷேகம் நடக்கிறது. ஜன., 14 மாலை, 6:30 மணிக்கு, ஐயப்பசாமி கோவிலில் மகரஜோதி தரிசனம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.