பதிவு செய்த நாள்
25
நவ
2018
02:11
தி.மலை: திருவண்ணாமலையில், கடந்த, 14 முதல் துவங்கி நடந்து வரும் தீப திருவிழாவில், நேற்று முன்தினம் மஹா தீபம் ஏற்றும் விழா நடந்தது. விழா நடந்த, பத்து நாட்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து, பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர். கிரிவலப்பாதை முழுவதும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட கழிவு, தற்காலிக கடைகளால் ஏற்பட்ட கழிவு, பக்தர்கள் கொண்டு வந்த உணவு பொட்டலங்கள், திண்பண்டங்கள் ஆகியவற்றால் ஏற்பட்ட கழிவுகள் என, கிரிவலப்பாதை முழுவதும், 14 கி.மீ., தூரத்துக்கு குப்பை கழிவு ஏற்பட்டது. இதை அகற்றும் பணியில், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த நகராட்சி பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். கடந்த, இரண்டு நாட்களாக, 550 டன் குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கிரிவலப்பாதையில் தூய்மைப்பணியில், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.