பதிவு செய்த நாள்
16
பிப்
2012
11:02
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் நானூறு ஆண்டுகள் பழமைமிக்க நாயக்கர் கால ஓவியங்களை புதுப்பிக்கும் பணியை தொல்லியல்துறையினர் துவங்கியுள்ளனர். உலக வரலாற்றில் இன்றைக்கும் அதிசயமாக தஞ்சை பெரியகோவில் காட்சியளிக்கிறது. ராஜராஜசோழன் புகழை எக்காலத்துக்கும் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பணி, கி.பி., 1004ம் ஆண்டு துவங்கியது. 1010ம் ஆண்டு நிறைவுற்றது. 10 ஆண்டுகளில் பெரியகோவில் கட்டி முடிக்கப்திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் முன் தொழிற்சங்க கூட்டமைப்பு உண்ணாவிரதம் கும்பகோணம்: திருபுவனம் பட்டுக் கூட்டுறவு சங்கத்தின் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் தொடர் உண்ணாவிரதத்தில் நேற்று ஈடுபட்டனர். கும்பகோணம் அருகே திருபுவனம் சன்னதிதெருவில் திருபுவனம் பட்டு நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி சங்கம் உள்ளது. சங்கத்தின் வாயில் முன் நேற்று காலை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தொடர் உண்ணாவிரதம் தொடங்கியது.
தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் பஞ்சநாதன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ., நிர்வாகக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி, ஏ.ஐ.டி.யூ.சி., மணிமூர்த்தி, ஐ.என்.டி.யூ.சி., மோகன், நாராயணசாமி, ஹரிதாஸ், தே.மு.தி.க., சங்கர்தாஸ், ம.தி.மு.க., ராதாகிருஷ்ணன், தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தை ஐ.என்.டி.யூ.சி., மாவட்ட தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். சங்க உறுப்பினர்களுக்கு உடனடியாக ஜரிகை வழங்கி வேலைவாய்ப்பு வழங்கவேண்டும். தேங்கியுள்ள பட்டுப்புடவைகளுக்கு விலை உச்ச வரம்பின்றி தள்ளுபடி வழங்கவேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் தொடர்ந்து 30 சதவீதம் மானியம் வழங்கவேண்டும். மாத ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்ததை உடன் அமுல்படுத்தவேண்டும். மத்திய அரசு அனுமதித்துள்ள 3,000 கோடியில் சங்க அடிப்படை உறுப்பினர்களின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.