பதிவு செய்த நாள்
16
பிப்
2012
10:02
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிபேட்டை ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நாளை (பிப்.,17) முதல் 23ம் தேதி வரையில் மயானக்கொள்ளை பெரு விழா நடக்கிறது. இதையொட்டி, நாளை காலை 9.15 மணிக்கு மஹா கணபதி, சுப்பிரமணியர், அம்பாள் ஹோமங்கள் நடக்கிறது. மாலை 5 மணிக்க சக்தி கரகம் அழைப்பு, மாலை 6 மணிக்கு கொடியேற்றமும், இரவு 7 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் அம்மன் வெள்ளி கவசத்தில் திருவீதி உலா நடக்கிறது. வரும் 18ம் தேதி காலை 5 மணிக்கு சக்தி கரகம் ஊர்வலமும், காலை 7.30 மணிக்கு குண்ட பூஜை (பூ மிதி விழா) மாலை 6 மணிக்கு ரிஷப வாகனத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் திருவீதி உலாவும், 19ம் தேதி மாலை 3.30 மணிக்கு பொங்கல் வைத்தல், இரவு 7 மணிக்கு கங்கையில் நீராடி அபிஷேகம், ஆராதனை சிம்ம வாகனத்தில் ஸ்ரீதாண்டேஸ்வரரும், ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மனும் வீதி உலா நடக்கிறது. வரும் 20ம் தேதி காலை 9 மணிக்கு பால் குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம் வருதலும், காலை 10 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம், இரவு 9 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 11 மணிக்கு காமதேனு வாகனத்தில் தாண்டவேஸ்வரரும், ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மனும் ஸ்ரீசிவன் பார்வதி அவதாரத்தில் திரு வீதி உலாவும். இரவு 1 மணிக்கு முகவெட்டு ஊர்வலமும் நடக்கிறது. வரும் 21ம் தேதி காலை 8 மணிக்கு பக்தர்கள் அலகு போடும் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு அங்காளபரமேஸ்வரி அம்மன் அலங்காரத்துடன் பூதவாகனத்தில் மயானம் செல்லும் மயானக்கொள்ளை பெருவிழாவும், மாலை 6 மணிக்கு பூ பல்லக்கு ரதத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் திரு வீதி உலாவும், அதிகாலை 1 மணிக்கு பன்னீர் அபிஷேகம் நடக்கிறது. வரும் 22ம் தேதி பல்லக்கு உற்சவம் குதிரை வாகனத்தில் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அவதாரத்தில் திரு வீதி உலாவும், 23ம் தேதி மாலை 3 மணிக்கு பிள்ளøப்பாவு ஊர்வலமும், இரவு 7.30 மணிக்கு கும்ப பூஜை கொடியிறக்கம் நடக்கிறது. இதையொட்டி தினம் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார். நாளை முத்தங்கி அலங்காரம், 18ம் தேதி ஸ்ரீபகவதியம்மன், 19ல் ஸ்ரீகருமாரியம்மன், 20ல் சிவசக்தி, 21ல் அங்காளம்மன், 22ல் லிங்கேஸ்வரி, 23ல் சந்தான ல்டசுமி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார். 21ம் தேதி காலை சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி செல்வம் குழுவினரின் அலகு போடுதல் நிகழ்ச்சியும், அன்று மாலை 5 மணிக்கு கர்நாடகா புகழ் பார்த்தசாரதி குழுவினர÷ன் டோலோ மேளம் மற்றும் பூஜா குனிதா, வீரகாசிகுனிதா, பெல்தங்கடி, கும்பே குனிதா நடன நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கும் 22ம் தேதி மாலை 5 மணிக்கும் கர்நாடகா மாநில மைசூர் புகழ் பன்னாரி குழுவினரின் நகாரி மேளம் நடக்கிறது. 19, 20, 21ம் தேதி காலை 8 மணிக்கும், மாலை 5 மணிக்கும் சொர்ணம்பட்டி சாமிநாதன் குழவினரின் தப்பட்டை மற்றும் நாட்டுமேளமும், நாளை முதல் 22ம் தேதி வரையில் கடகத்தூர் முனிதேவுடு குழுவினரின் நாதஸ்வர நிகழ்ச்சியும், சசிகுமார், முத்துராஜ், கோவிந்தராஜ் சிவலிங்கம் குழுவினரின் பம்பை நிகழ்ச்சியும், 24ம் தேதி இரவு 8 மணிக்கு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ராஜ் மெலோடிஸ் ஆர்க்கெஸ்ட்ராவும், மிமிக்ரி செந்தில், அல்வா வாசு இணைந்து நடத்தும் பல்சுவை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் செட்டியார் கமலேஷன் மற்றும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் செய்து வருகின்றனர்.