பெ.நா.பாளையம்: நாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில், மஹா கும்பாபிஷேக நான்காம் ஆண்டு விழா நடந்தது.காலை, 5:00க்கு சுதர்சன ஹோமம், லட்சுமி ஹயக்கிரீவர் விக்கிரக பிரதிஷ்டை ஆகியன நடந்தன. தொடர்ந்து, பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. வடசித்துார் ரஞ்சனி ராம்குமார் மற்றும் ராமச்சந்திரன் குழுவினரின் திருக்கல்யாண வைபவ இன்னிசை, ராமச்சந்திரனின் பக்தி சொற்பொழிவு நடந்தது.மலரலங்காரத்தில் பூதேவி, ஸ்ரீதேவியுடன் கரிவரதராஜ பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி ஊர்வலம் நாயக்கன்பாளையம் கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. தொடர்ந்து, கிருஷ்ண கிருபா நாமசங்கீர்த்த நிகழ்ச்சி நடந்தது.