பதிவு செய்த நாள்
27
நவ
2018
12:11
புதுச்சேரி: பாரதிபுரத்தில் உள்ள, அய்யப்ப சுவாமி கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் மண்டல காலத்தில் பிரம்மோற்சவ விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிவா எம்.எல்.ஏ., தி.மு.க., நிர்வாகிகள் மாறன், நடராஜன், சக்திவேல், கலியகார்த்திகேயன், ராமு, சசி, அகிலன் மற்றும் அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.முன்னதாக, காலை 5:00 மணிக்கு, சிறப்பு மஹா கணபதி ஹோமம், கலசாபிஷேகம், அஷ்டாபிஷேகம், சந்தனாபிஷேகம், ஸ்ரீபூதபலி நடந்தது. வரும் 30ம் தேதி மாலை, சுவாமி வேட்டைக்கு புறப்படும் பள்ளிவேட்டை நிகழ்ச்சியும், 1ம் தேதி, வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 2ம் தேதி காலை, சந்தனாபிஷேகமும், இரவு 7.00 மணிக்கு, புஷ்பாபிஷேகமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, அய்யப்ப சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.