ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி தெப்பக்குளம் பெரியதளவாய் மாடசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.ஆழ்வார்குறிச்சி தெப்பக்குளத்தில் பெரியதளவாய் மாடசாமி கோயில் உள்ளது. இங்கு நடந்த சிறப்பு பூஜையில் தளவாய் மாடனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், விசேஷ பூஜை, சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தல் மற்றும் படைப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர்.