ஆழ்வார்குறிச்சி:கடையம் கைலாசநாதர் - பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலில் பைரவர் பூஜை நடந்தது.கடையம் பஸ் ஸ்டாண்ட் அருகே கைலாசநாதர் - பஞ்சகல்யாணி அம்பாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு விசேஷ பூஜை, சிறப்பு அபிஷேகம் ஆகிய வைபவங்களை குமார் பட்டர் நடத்தினார். பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.