ராமேஸ்வரம் கோயிலில் அம்பானிக்காக ஆகம மீறல்இந்து முன்னணி கண்டனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2018 12:11
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வந்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானிக்காக, நடை அடைப்பதில் ஆகம விதி மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
முகேஷ் அம்பானி, அவரது மகன் ஆனந்த் அம்பானி ஆகியோர் நேற்று நவ. 27 மதியம் 12:55 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்து விட்டு 1:50 மணிக்கு திரும்பினர். கோயிலில் உச்சிகால பூஜை முடிந்ததும் மதியம் 1:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மதியம் 3:30 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.
ஆனால், நேற்று நவ. 27 ஆகமவிதிக்கு மாறாக நடை திறந்து வைத்ததாக அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இந்து முன்னணியினர் கண்டனம் தெரிவித்தனர்.
மாவட்ட துணைத் தலைவர் சரவணன் கூறுகையில், ""கோயிலை கட்டிய மன்னர் கூட ஆகம விதியை மீறாமல் தரிசனம் செய்ததாக வரலாறு உண்டு. ஆனால் தொழிலதிபர் ஒருவரின் தரிசனத்திற்காக மதியம் 2:00 மணி வரை கோயில் நடை அடைக்கவில்லை.
இது ஆகம விதிக்கு எதிரானது. அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.