பெரணமல்லூர்: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த, தவணி கிராமத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான தாந்தோணி அம்மன் கோவில் உள்ளது. கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையால், கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால், கோவிலில் வழிபாடு நிறுத்தப்பட்டது.
இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த, 23ல் பெய்த மழையால், தாந்தோணி அம்மன் கோவில் மண்டபமும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழரசி விழுந்த மண்டபத்தை ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்க, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 9.58 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்தார். இதற்கான, பணிகள் விரைவில் துவங்க உள்ளது.