பதிவு செய்த நாள்
16
பிப்
2012
11:02
கோவை :கோவையின் காவல் தெய்வமாக விளங்கும், கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, வரும் 29ல் நடக்கிறது. கோவை, பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில் அமைந்துள்ளது, கோனியம்மன் கோவில். இக்கோவில் தேர்த்திருவிழா, கடந்த ஜன., 30ம் தேதி, தேர் முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. தினமும் காலை, மாலை இருவேளையும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடக்கின்றன. வரும் 5ம் தேதி வரை நடக்கும் இவ்விழாவுக்கான பூச்சாட்டுதல், நேற்று முன்தினம் நடந்தது. வரும் 20ம் தேதி கிராமசாந்தியும், 21ல் அக்கிச்சாட்டுதலும், 24ல் திருவிளக்கு வழிபாடும், 28ம் தேதி திருக்கல்யாணமும் நடக்கிறது. திருத்தேர் விழா, வரும் 29ம் தேதி காலை 5.00 மணிக்குள், அம்மன் திருத்தேரில் அமர்தல் நிகழ்வும், பகல் 3.30 மணிக்கு, திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. மார்ச் 1ம் தேதி பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 5ம் தேதி, வசந்த உற்சவத்துடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.