பதிவு செய்த நாள்
01
டிச
2018
12:12
திருத்தணி: திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில், மனோன்மணி உடனுறை சதாசிவ லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், சொர்ண அஷ்ட பைரவர் மஹா யாகம், கோவில் வளாகத்தில் நேற்று (நவம்., 30ல்)நடந்தது.
இதற்காக, 12 யாகசாலைகள் அமைக்கப்பட்டன.மதியம், 12:30 மணிக்கு, பைரவருக்கு, கலசநீர் ஊற்றி மஹா அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. திருத்தணி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த தொம்பரம்பேடு கிராம, மகா கால பைரவர் கோவிலிலும், பைரவர் விழா நடந்தது. செங்கல்பட்டு அடுத்த, ஈச்சங்கரணை திருவடிசூலம் சாலையில், பைரவர் நகரில், ஸ்ரீமஹா பைரவர் ருத்ர கோவில் அமைந்து உள்ளது.இங்கு, பைரவர் ஜெயந்தி விழா, நேற்று (நவம்., 30ல்) விமரிசையாக நடந்தது.