பதிவு செய்த நாள்
01
டிச
2018
12:12
ஓமலூர்: அமலோற்பவ மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஓமலூர் ஆர்.சி., செட்டிப்பட்டியில், 160 ஆண்டு பழமையான, புனித ராயப்பர் சின்னப்பர் தேவாலயம் உள்ளது. அங்கு, ஆண்டுதோறும் டிசம்பர் தொடக்கத்தில், அமலோற்பவ மாதாவின், 10 நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன், காலரா நோயால் பலர் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு ஏற்பட்டது.
அப்போது, நோயிலிருந்து விடுபட, மாதாவிடம், மக்கள் வேண்டுதல் வைத்து பிரார்த்தனை யில் ஈடுபட்டனர். பின், அந்நோய் இல்லாததால், அப்போது முதல், கிராம மக்கள், வேண்டுதல் திருவிழா கொண்டாடி வருகின்றனர். அதன்படி, நேற்று (நவம்., 30ல்) மாலை, 6:00 மணிக்கு, கோவிலில் இருந்து, மாதா உருவம் பொறித்த கொடியை, சிறுவர், சிறுமியர், தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். ஆலய வளாகத்தில், சேலம் மறைமாவட்ட பள்ளிகளின் செயலாளர் மரியஜோசப்ராஜ், கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து திருப்பலி நடந்தது. ஆர்.சி., செட்டிப்பட்டி பங்குத்தந்தை எட்வர்ட் ராஜன், ஊர்மக்கள் பங்கேற்றனர்.