தும்பைப்பட்டி, சங்கரநாராயணர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2018 12:12
தும்பைப்பட்டி: சிவாலயபுரம் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு அலங்கார வழிபாடு மற்றும் சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. ரமேஷ் அய்யர் , சங்கர நாராயணனர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.