தாண்டிக்குடி: திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயில் திருவிழா நடந்தது. பக்தர்கள் உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டு (சேத்தாண்டி வேடம்) ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.முன்னோர்கள் தோல் நோய் மற்றும் இதர நோய்களை குணப்படுத்த இதுபோன்ற நடைமுறைகளை கோயில் விழாக்களில் பின்பற்றி உடல் ஆரோக்கியத்தை பேணி வந்ததாக கூறப்படுகிறது.கிராம மக்கள் கூறுகையில், சீனாவில் மண் குளியல் மருத்துவம் கடைபிடிக்கப்படுகிறது. கேரளாவிலும் இந்நடைமுறை பின்பற்றி வருகின்றனர். முன்னோர்கள் கொண்டு வந்த சேறு பூசும் விழா தாண்டிக்குடியில் மட்டுமே நடப்பது குறிப்பிடத்தக்கது, என்றனர்.