கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் சத்ய சாய் பாபாவின் 93வது பிறந்த விழாவையொட்டி ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் சத்யசாயி சேவா சமீதி சார்பில் நடந்த விழாவை முன்னாள் கவுன் சிலர் முருகன் பிரசாந்தி கொடியேற்றி துவக்கி வைத்தார். ஜெயந்தி, விஜயலட்சுமி, லலிதா, தமிழரசி, லோகசாந்தி குத்துவிளக்கேற்றினர். சிறுவங்கூர் சந்திரன் வரவேற்றார்.
ஆசிரியர் செல்வம், மாவட்ட தமிழ் கவிஞர் மன்ற தலைவர் ஆசுகவி.ஆராவமுதன், சேலம் மாவட்ட ஓங்கிணைப்பாளர் முரளி, விழுப்புரம் மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் தன லட்சுமி நாராயணன், திண்டுக்கல் முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணன் ஆகியோர் ஆன்மீக சொற்பொழிவாற்றினர்.
தொடர்ந்து புட்டபர்தி சேவை குழுவினர் மற்றும் ஏழை எளியோர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஏமப்பேர் பகுதியின் முக்கிய வீதிகளின் வழியாக பஜனையுடன் சாய்பாபா பட ஊர்வலம் நடந்தது.