பதிவு செய்த நாள்
03
டிச
2018
02:12
எண்ணுார்: தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் மஹா கும்பாபிஷேகம், நேற்று வெகு விமரிசையாக நடந்தது.எண்ணுார், தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் பிரசித்தி பெற்றது.
கோவில் அமைக்கப்பட்டு, 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 5 லட்சம் ரூபாய் செலவில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று (டிசம்., 2ல்) காலை, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (டிசம்., 1ல்), விக்னேஷ்வர பூஜை, அனுக்ஞை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, மிருத்ஸங்கிரஷனம், அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், பூர்ணாஹீதி நடைபெற்றது.
நேற்று (டிசம்., 2ல்) காலை, இரண்டாம் கால பூஜை, கோ பூஜை, ரகீஷாபந்தனம், திரவ்யா ஹூதி, பூர்ணாஹீதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன.காலை, 10:45 மணிக்கு, செண்டை மேளம், மந்திரங்கள் முழங்க, புனித நீர், விமான கலசத்தில் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள்,விண்ணதிர சரண கோஷங்கள் முழங்கினர்.பின், மூலவரான தர்ம சாஸ்தா அய்யப்பனுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, கோவில் வளாகத்தில் வீற்றிருக்கும், விநாயகர், பால முருகன் சன்னதிக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.