மானாமதுரை:மானாமதுரை ஆதனூர் ரோட்டில் உள்ள சீரடி சாய்பாபா கோயில் கட்டுமான பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு கடந்த 1ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
நேற்று (டிசம்., 2ல்) காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. காலை 9:30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு தொடங்கியது. மகேஸ்வரன் சாஸ்திரிகள் தலைமையிலான சிவாச்சார்யார்கள் யாகசாலையை வலம் வந்து கும்பங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.