மூணாறு:இடுக்கி மாவட்ட போலீசார் சார்பில்,சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்கப்படுகிறது.
இடுக்கி மாவட்டம் வழியாக சபரிமலைக்குஐயப்ப பக்தர்கள் ஏராளம்சென்று வருகின்றனர். இரவில் பயணிக்கும் பக்தர்களின் களைப்பை போக்கி,பக்தர்களின் வாகனங்கள்விபத்துகளில் சிக்குவதை தவிர்த்து,டிரைவர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில், போலீசார் சார்பில் இரவில் சுக்கு காபி வழங்குவது
வழக்கம்.அதன்படி கேரளா போலீஸ் சங்கம், போலீஸ் உயர் அதிகாரிகள் சங்கம், ஜன மைத் திரி போலீஸ் எனும் அமைப்பு ஆகியோர் சார்பில், தொடுபுழாவில் பக்தர்கள் வாகனங்கள் அதிகமாக கடந்து செல்லும் வழியில்நேற்று முன்தினம் முதல் (டிசம்., 1ல்)சுக்கு காபி வழங்கப்படுகிறது.
சபரிமலை சீசன் முடியும் வரைதினமும் இரவில் 10:00 மணி முதல் அதிகாலை வரை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.