பதிவு செய்த நாள்
03
டிச
2018
02:12
பு.புளியம்பட்டி: இந்து முன்னணி ஆன்மிக திருவிழா விளக்க மகாலட்சுமி ரதம், புன்செய் புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (டிசம்., 2ல்)வருகை தந்தது. யாக குண்டத் திற்கு தேவையான பொருட்களை மக்கள் வழங்கினர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், பொங்கலூரில், இந்து முன்னணி சார்பில், 1,008 கோமாதா பூஜை மற்றும் லட்சம் தம்பதியர் பங்கேற்கும் சோடஷ மகாலட்சுமி மகா யாகம், என்ற ஆன்மிக திருவிழா, வரும், 23ல் நடக்கிறது.
இது குறித்து விளக்கும் வகையில், மகாலட்சுமி ரதம் சுற்றுப்பயணம் செல்கிறது. நேற்று (டிசம்., 2ல்) காலை, புன்செய்புளியம்பட்டிக்கு வந்த ரதத்திற்கு, நகர இந்து முன்னணி சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, கோவை சாலை, மாதம்பாளையம் சாலை, பவானிசாகர் சாலை, உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக சென்றது. வழியில் காத்திருந்த மக்கள், யாக குண்டத்திற்கு தேவையான, வீட்டிற்கு ஒரு செங்கல் மற்றும் பசு நெய் உள்ளிட்ட பொருட் களை வழங்கினர்.
மதியத்துக்கு மேல், பவானிசாகர் ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட, கள்ளிப்பாளையம், மாராயிபாளையம், உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மகாலட்சுமி ரதம், சென்றது.