திண்டிவனம்: திண்டிவனம் வந்த சமயபுர மாரியம்மன் பிரதிஷ்டை ரதத்திற்கு, சிறப்பு ஆராதனை நடந்தது. தமிழகம் முழுவதும், இந்து கலாசாரம் காக்கவும், இந்து ஒற்றுமையை வளர்க்கும் வகையில், இந்து கலாசார சமிதி சார்பில், சமயபுர மாரியம்மன் எந்திர பிரதிஷ்டை செய்யப்பட்ட மாரியம்மன் ரதத்தில் பவனி வந்து கொண்டிருக்கிறது. நேற்று திண்டிவனம் அடுத்த சாரம் பகுதிக்கு இந்த சமயபுர மாரியம்மன் பிரதிஷ்டை ரதம் வந்தது. சாரம் ஆறுபடை கோவில் வளாகத்தில், கோவில் அர்ச்சகர் கர்ணன் தலைமையில், சிறப்பு ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக, ஆவணிப்பூர் கிராமத்திற்கு, பிரதிஷ்டை ரதம் சென்றடைந்தது.