பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2018 02:12
பண்ருட்டி:திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் 4வது சோமவாரத்தையொட்டி, 108 சங்காபிஷேகம் நேற்று (டிசம்., 10ல்) நடந்தது.பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று (டிசம்., 10ல்) கார்த்திகை மாத 4வது சோமவாரத்தையொட்டி, நேற்று (டிசம்., 10ல்) மதியம் 1:30 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு 108 வலம்புரி, 108 இடம்புரி சங்காபிஷேகம் நடந்தது.மாலை 5:30 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ் வரர், பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித் தனர். 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.