சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் 108 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2018 02:12
சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு பாத்தியப் பட்ட சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோம வாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. புனித நீர் ஊற்றப்பட்ட 108 சங்குகளால் வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக மும், சங்காபிஷேகமும் நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.