பதிவு செய்த நாள்
18
பிப்
2012
10:02
திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில், அம்மன் பூத்தேரில் பவனி வந்தார். கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப் பெருவிழா துவங்கியுள்ளது. முதல்நாள் நிகழ்ச்சியாக அம்மனுக்கு பாலபிஷேகம், பூத்தமலர் அலங்காரம் நடந்தது.
நேற்று பூச்சொரிதல் விழா நடந்தது. பூத்தேரில், அம்மன் புறப்பட்டு மேற்குரதவீதி, கலைகோட்டு விநாயகர் கோயில், ஸ்பென்சனர் தெரு, கோபாலசமுத்திரம் தெரு, கிழக்கு, தெற்கு ரதவீதிகள் வழி பவனி வந்தார்.
வழிநெடுகிலும் மக்கள், பூ வழங்கி அம்மனை வழிபட்டனர். நேற்று முழுவதும் அம்மனுக்கு பூ அபிஷேகம் நடந்தது. பிப்., 21 பிற்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து மண்டகபடிகள் நடைபெறும். மார்ச் 4 ல், மஞ்சள் நீராட்டு, அன்று மாலை 5 மணிக்கு கொடி இறக்கமும் நடக்கிறது.