உத்தரகோசமங்கையில் ரூ.1 கோடியில் பிரகாரம் : திருப்புல்லாணிக்கு கூடுதல் பஸ்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2012 10:02
கீழக்கரை : திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் சுவாமி கோயில்,உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் புனரமைப்பு பணிகளை அமைச்சர் ஆனந்தன் ஆய்வு செய்தார். பின்னர் இவர் கூறியதாவது: உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் வடக்கு,தெற்கு பகுதிகளில் ரூ.1 கோடியில் பிரகாரம் கட்டப்படும். முதற்கட்டமாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. திருப்புல்லாணியில் வைகுண்ட ஏகதாசி மண்டபம் ரூ.10 லட்சம், தீர்த்த மண்டபம் 13.50 லட்சத்தில் புனரைமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். திருப்புல்லாணியில் விடுதி கட்டவும், வெளியூர் பக்தர்கள் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்படும், என்றார்.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து உத்தரகோசமங்கைக்கு பக்தர்களின் வசதிக்காக நேற்று முதல் அரசு பஸ் போக்குவரத்தை அமைச்சர் ஆனந்தன் துவக்கி வைத்தார். அமைச்சர் சுந்தரராஜ் கூறுகையில், ""நயினார்கோயில், தேவிப்பட்டினம், திருப்புல்லானி உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களுக்கும் பஸ் விடப்படும், என்றார்.