Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 64 அடி உயர கோதண்டராம சுவாமி சிலை: நகர ... பழநி மலைக்கோயில் ரோப்கார் நிறுத்தம் பழநி மலைக்கோயில் ரோப்கார் நிறுத்தம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் மகாலெட்சுமி தீர்த்தம் பிரதிஷ்டை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் மகாலெட்சுமி தீர்த்தம் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

14 டிச
2018
12:12

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று (டிச.,14) மகாலெட்சுமி தீர்த்தம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமேஸ்வரம் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் தினமும் 10 முதல் 15 ஆயிரம் பக்தர்கள் நீராடுகின்றனர். கோயில் விழா மற்றும் விடுமுறை நாட்களில் 30 ஆயிரம் பக்தர்கள் நீராடுவதால், கூட்ட நெரிசலில் தவிக்கின்றனர். இதனை தவிர்க்க 1 முதல் 6வது தீர்த்தம் (மகாலெட்சுமி, காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி, சங்கு, சக்கரம்) வரை இடம் மாற்றம் செய்ய மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டது. அதன்படி கோயில் 2ம் பிரகாரத்தில் புதியதாக 6 தீர்த்த கிணறுகள் தோண்டப்பட்டு, மகாலெட்சுமி தீர்த்தம் தவிர மற்ற 5 தீர்த்தமும் அக்.,28ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில், தீர்த்த கிணறுகள் பிரதிஷ்டை குறித்து அறிக்கை அளிக்குமாறு கோயில் இணை ஆணையருக்கு உயர்நீதின்றம் உத்தரவிட்டது. அதன்படி மகாலெட்சுமி தீர்த்தம் பிரதிஷ்டை செய்ய நேற்று கோயில் கல்யாண மண்டபத்தில் ஒரு குண்டத்தில் யாக பூஜை செய்து முதல் கால பூஜை துவங்கியது. இன்று(டிச.,14) 2ம் கால பூஜை முடிந்ததும் காலை 6:00 முதல் 6:30 மணிக்குள் 2ம் பிரகாரத்தில் உள்ள புதிய கிணற்றில் கோயில் குருக்கள் மகாலெட்சுமி தீர்த்தத்தை பிரதிஷ்டை செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி செய்து வருகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar