Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோவிலில், ‘லிப்ட்’ ... ஆதிமூர்த்தி கோவிலில் கருடசேவை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

14 டிச
2018
01:12

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா மகா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதிகாலை சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்து பிரகாரம் வலம் வந்து கொடிமரம் சன்னதியில் எழுந்தருள, 8:00 மணிக்கு கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. கொடியை ஆச்சாரியார் நடராஜர் தீட்சதர் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. 18ம் தேதி தெருவடைச்சானும்; 22ம் தேதி நடராஜர் மார்கழி ஆருத்ரா திருத்தேரோட்டமும் நடக்கிறது. மாலை சுவாமி தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் முகப்பு ராஜசபையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 8:00 மணிக்கு சுவாமிக்கு ஏக கால லட்சார்ச்சனையும், மறுநாள் 13ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகமும்; ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரத்திலும் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.அதனைத்தொடர்ந்து சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று மதியம் 2:00 மணிக்கு ஆருத்ரா மகா தரிசனம் சித்சபை பிரவேசம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர் செயலாளர் நடேஸ்வர தீட்சிதர் தலைமையில் தீட்சிதர்கள் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar