நெட்டப்பாக்கம்: கொங்கம்பட்டு பச்சைவாழியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.மடுகரை அடுத்துள்ள கொங்கம்பட்டு கிராமத்தில் பச்சைவாழியம்மன், அங்காளம்மன், பெரிய பாளையத்தம்மன் ஆகிய கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜையும், 7 மணிக்கு பச்சைவாழியம்மன், அங்காளம்மன், பெரியபாளையத்தம்மன் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், கொங்கம்பட்டு மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.