பதிவு செய்த நாள்
21
டிச
2018
12:12
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற உள்ள திருப்படித் திருவிழா குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.திருத்தணி முருகன் கோவிலில், வரும், 31ம் தேதி திருப்படித் திருவிழாவும், ஜன., 1ம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெற உள்ளது.
விழாவின் முன்னேற்பாடுகள் குறித்து, ஆட்சியர், மகேஸ்வரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம், மலைக்கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் நடந்தது.
கோவில் இணை ஆணையர், சிவாஜி வரவேற்றார். தக்கார், ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வருவாய், ஊரக வளர்ச்சி, மின்வாரியம், உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று, விழாவிற்கு தங்கள் துறையின் மூலம் செய்யப் பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆட்சியரிடம் விளக்கினர்.
தொடர்ந்து ஆட்சியர், மலைக்கோவிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என, அறிவுறுத்தினார்.நிகழ்ச்சியில் திருத்தணி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., நரசிம்மன், வருவாய் கோட்டாட்சியர் பவணந்தி உட்பட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.