பதிவு செய்த நாள்
24
டிச
2018
03:12
திருப்பூர்:பொங்கலூரில், சோடஷ மகாலட்சுமி மகா யாகத்தில், நேற்று (டிசம்., 23ல்) மாலை, ஸ்ரீ மீனாட்சி -சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.விழா வளாகத்தில், பிராம் மாண்ட மேடையில், திருக்கல்யாண மணப்பந்தல் அமைக்கப்பட்டு, ஸ்ரீமீனாட்சியும், சொக்க நாதரும், மணக்கோலத்தில் எழுந்தருளினர். ராஷ்டிரிய சேவிகா சமிதி செயலாளர் ரவீந்திரன், திருக்கல்யாண உற்சவ வைபவத்தை துவக்கி வைத்தார்.திருப்பூர் ஆடல் வல்லான் அறக்கட்டளையினர், திருக்கல்யாண உற்சவ நிகழ்வை நடத்தி வைத்தனர்.
தடைகள் நீக்கும் பதிகம், திருமண தடைநீக்கும் பதிகம், நோய் தீர்க்கும் பதிகம், சிவபதம் வழங்கும் பதிகங்களை பாடினர்.மீனாட்சி திருக்கல்யாண உற்சவத்தில், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.,க்கள் குணசேகரன், விஜயகுமார், நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று, வழிபட்டனர்.
ஆர்.எஸ்.எஸ்.,கோட்ட தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி, சேவாபாரதி மாநில துணை தலைவர் எக்ஸலான் ராமசாமி, சஷ்டி சேவா அறக்கட்டளை துணை தலைவர் சடையப்பன் மற்றும் இந்து முன்னணி உட்பட இந்து இயக்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அருள்மழை பொழிவுஸ்ரீமீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம் துவங்கிய, சில நிமிடங்களில், திடீரென மழை பெய்தது. மீனாட்சியின் அருளாட்சியின் மழை பெய்வது வழக்கம் என்று, ஆடல்வல்லான் அறக்கட்டளையினர் மகிழ்ச்சியுடன், சில பதிகங்களை பாடினர். தொடர்ந்து, கால் மணி நேரம் பெய்த மழை அதன்பின் ஓய்ந்தது.