மூணாறு: மூணாறில் தோட்டத்தொழிலாளர்கள் கோயில்களில் திருவிழாக்கள் நடத்தி வருகின்றனர். மூணாறைச் சுற்றிலும் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்களான தமிழர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது கோயில்களில் திருவிழாக்கள் நடத்துவது வழக்கம். ஆரம்ப காலத்தில் தோட்டங்களை நிர்வாகித்து வந்த ஆங்கிலேயர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு வசதியாக, தொழிலாளர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளித்தனர். அப்போது அந்தந்த பகுதிகளில் கோயில்கள் அமைத்து வழிபட தொடங்கினர். அந்த வழக்கம் தொடர்ந்து கடை பிடிக்கப்பட்டு வருகிறது.திருவிழாவின்போது வீடுகளை சுத்தம் செய்து விரதமிருந்து, முளைப்பாரி,பறவை காவடி, அக்னி சட்டி எடுத்து, அலகு குத்தி, தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்துவர். இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக, சில எஸ்டேட்டுகளில் வாரவிடுமுறை நாட்களில் திருவிழாக்களை நடத்தினர்.பல எஸ்டேட்டுகளில் தொடர்ந்து திருவிழா நடக்கிறது.