திருக்கோவிலூர்:மணம்பூண்டி பாலமணிகண்டன் சுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா நடந்தது.திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி பாலமணிகண்டன் சுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா கடந்த 22ம் தேதி கொயேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை நேற்று (டிசம்., 24ல்) நடந்தது.
காலை 9:00 மணிக்கு‚ தென்பெண்ணை ஆற்றில் கலசம் புறப்பாடாகியது. கோவிலில் வளாகத்தில் கணபதி ஹோமம்‚ துர்கா ஹோமம்‚ மகாசாஸ்தா ஹோமம்‚ சடாசர ஹோமம்‚ சுவாமி ஐயப்பனுக்கு மகா அபிஷேகம்‚ பூர்ணாகுதி‚ கடம் புறப்பாடாகி மூலவர்க்கு மகா அபிஷேகம் நடந்தது.மாலை 3:00 மணிக்கு திருவாபரணம் புறப்பாடு‚ இரவு 7:00 மணிக்கு ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.