பழநி: பழநி முருகன்கோயிலுக்கு கோவை பக்தர் ராமசாமி, ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
வெள்ளியில் செய்த வஜ்ராயுதம், சேவல்கொடி, வேல் என மொத்தம் 2,015 கிராம் எடையுள்ள பொருட்களை பழநி முருகன் கோயிலில் சண்முகர், வள்ளி, தெய்வானை சன்னதியில் வைத்து அபிஷேகம், அலங்காரம் செய்து, உச்சிகாலத்தில் வழிப்பட்டார். அதன்பின் மேற்கண்ட பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்தினார்.