பதிவு செய்த நாள்
26
டிச
2018
01:12
கொடுமுடி: ஊஞ்சலூரில் சேஷாத்ரி சுவாமிகள் ஆராதனை விழா, நேற்று டிசம்பர் 25ம்சுவாமி நகர்வலத்துடன் தொடங்கியது. கொடுமுடி வட்டாரம், ஊஞ்சலூரில் சேஷாத்ரி சுவாமிகளின், 90வது ஆண்டு ஆராதனை விழா, நேற்று (டிச.25) நகர்வலத்துடன் தொடங்கியது.
தனுர் மாத பூஜையும், காலை 6:00 மணிக்கு, காவேரி நதி பூஜை, பின்னர், 4 வேதங்களைச் சேர்ந்த அர்ச்சகர்களால் வேதபாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (26) முதல், வரும் 30,
வரையிலான நாட்களில், தினந்தோறும் அதிகாலை 5:00 மணிக்கு, தனுர் மாத பூஜை, வேதபாராயணம், உஞ்ச விருத்தி பூஜை, மதியம், 12:30 மணிக்கு, தீபாராதனையும், நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நாளான, டிசம்பர் 30ம் தேதியன்று, காலை 10:00 மணிக்கு மேல், சேஷாத்ரி சுவாமிகளின் ஆராதனை விழா மற்றும் மதியம் 3:00 மணிக்கு, சத்குரு சுவாமிகளின்,
மங்களாட்சதை வைபவம், அதைதொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு, திருவீதி உலா நடக்க உள்ளது. ஆராதனை விழாவை முன்னிட்டு, இன்னிசை கச்சேரி, பொம்மலாட்டம் முதலிய கலைநிகழ்ச்சிகள் தினந்தோறும் நடந்து வருகிறது. விழாவில் கலந்து கொள்ள, உள்ளூர் மட்டுமல்லாது, வெளியூர்களில் இருந்தும், பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர்.