தர்மபுரி: தீத்தடுப்பு மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், தர்மபுரி எஸ்.வி., ரோட்டில் உள்ள, அபய ஆஞ்சநேயர் கோவில், சாலை விநாயகர் கோவிலில், அணையா விளக்கு பொருத்தப்பட்டது. சாலை விநாயகர் கோவிலில், 17 ஆயிரம் ரூபாய், ஆஞ்சநேயர் கோவிலில், 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில், செயல் அலுவலர் அமுதசுரபி முன்னிலையில், அணையா விளக்குகள் பொருத்தப்பட்டன.