பதிவு செய்த நாள்
26
டிச
2018
02:12
விழுப்புரம்:விழுப்புரத்தில் அகிம்சையை வலியுறுத்தி, ஜெயின் துறவி ஆசார்யர் மஹாஸ் ரமண் சொற்பொழிவாற்றினார்.நல்லெண்ணம், நன்னெறி, போதைவிடுவிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி டில்லியில் இருந்து ஜெயின் சமூக துறவி ஆசார்யர் மஹாஸ்ரமண் என்பவர், 15 ஆயிரம் கி.மீ., அகிம்சை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்பேரில், நேற்று (டிசம்., 25ல்) விழுப்புரத்திற்கு வந்த ஆசார்யர் மஹாஸ்ரமணனுக்கு, ஜெயின் ஸ்வேதாம்பர் தேராபந்த் சபா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இதை தொடர்ந்து,
விழுப்புரம் திரு.வி.க., வீதி சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், அகிம்சை குறித்து ஆசார்யர் மஹாஸ்ரமண், சொற்பொழிவாற்றினார்.அப்போது, ஜெயின் ஸ்வேதாம்பர்
தேராபந்த் சபா தலைவர் ஜவரிலால் மற்றும் நிர்வாகிகள் கவுதம் சுரனா, மகேந்தர், நீட்டால், மோத்திசந்த், வீர்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியை ஆடிட்டர் ராஜேஷ் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.