முள்படுக்கையில் அமர்ந்து பெண் சாமியார் அருள்வாக்கு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2018 11:12
திருப்புவனம்: ஏனாதியில் பெண் சாமியார் மார்கழியை முன்னிட்டு முள் படுக்கையில் அமர்ந்து அருள்வாக்கு கூறினார். ஏனாதி புது காலனியில் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறன்று பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆண்டுதோறும் மார்கழியில் பெண் சாமியார் ஒய்யவந்தாள் அம்மாள் முட்படுக்கையில் அமர்ந்து அருள்வாக்கு சொல்வது வழக்கம். இலந்தைமுள், கத்தாழைமுள், நெருஞ்சிமுள், ஈஞ்சமுள் உள்ளிட்ட முட்களால் படுக்கை அமைத்து அதன்மேல் 41 நாட்கள் விரதமிருந்து அருள்வாக்கு சொல்வார். இந்தாண்டு மார்கழி பிறப்பை முன்னிட்டு ஒய்யவந்தாள் அம்மாள் அருள்வாக்கு சொல்லும் நிகழ்வு நடந்தது.