பதிவு செய்த நாள்
27
டிச
2018
11:12
பழநி: பழநி முருகன்கோவிலில் விழா, தைப்பொங்கலன்று துவங்கி, ஜன., 24 வரை நடக்கிறது. தைப்பூசத் திருவிழா பழநி பெரியநாயகியம்மன் கோவிலில் ஜன., 15ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக, 20ல், திருக்கல்யாணமும், 21ல் தைப்பூசம் அன்று மாலை தேரோட்டம் நடக்கிறது.விழாவை முன்னிட்டு இடும்பன்குளம், சண்முகநதி பகுதிகளில் தற்காலிக நிழற்பந்தல்கள், குளியல் அறைகள் அமைக்கப்படுகின்றன.பாதயாத்திரை பக்தர்கள் நலன்வேண்டி இன்று மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னிதியில் யாகபூஜையும், தொடர்ந்து, ஜன., 4 வரை கிரிவீதி காவல்தெய்வங்கள், இடும்பன்கோவில்களில் அபிஷேகம், பிரார்த்தனை நடக்கிறது.